Hosea - Chapter 3
Holy Bible

1 ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வங்கள்மேல் பற்றுக்கொண்டு, உயர்ந்த திராட்சை அடைகளை விரும்புகின்றனர். எனினும் அவர்கள்மேல் ஆண்டவர் அன்பு வைத்துள்ளார். இதற்கு அடையாளமாக நீ மறுபடியும் போய், வேறொருவனால் காதலிக்கப் பட்டவளும் விபசாரியுமான ஒரு பெண்ணின் மேல்
2 அவ்வாறே நான் அவளைப் பதினைந்து வெள்ளிக்காசுகளையும் ஒன்றரை கலம் அளவுள்ள வாற் கோதுமையும் கொடுத்து எனக்கென வாங்கிக் கொண்டேன்.
3 பின்பு நான் அவளை நோக்கி, நீ வேசித்தொழில் புரியாமலும் வேறொருவனுக்கு உடைமை யாகாமலும், நெடுநாள் எனக்கே உரியவளாய் வாழவேண்டும். நானும் அவ்வண்ணமே உனக்காக வாழ்வேன் என்றேன்.
4 இஸ்ரயேல் மக்கள் பல நாள்கள் அரசனின்றி, தலைவனின்றி, பலியின்றி, பலி பீடமின்றி, குருத்துவ உடையின்றி, குல தெய்வச் சிலைகளுமின்றி இருப்பார்கள்.
5 அதற்குப் பிறகு, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும் தங்கள் அரசனாகிய தாவீதையும் தேடி வருவார்கள்: இறுதி நாள்களில் ஆண்டவரையும் அவர்தம் நன்மைகளையும் நாடி நடுக்கத்தோடு வருவார்கள்.

Holydivine