Isaiah - Chapter 61
Holy Bible

1 ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது: ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்: ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்
2 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும்,
3 சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் புகழ் என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். நேர்மையின் தேவதாருகள் என்றும் தாம் மாட்சியு
4 நெடுங்காலமாய் இடிந்து கிடந்தவற்றை அவர்கள் கட்டியெழுப்புவார்கள்: முற்காலமுதல் பாழாய்க் கிடந்தவற்றை நிலைநிறுத்துவார்கள்: தலைமுறை தலைமுறையாக இடிந்து அழிந்துகிடந்த நகர்கறைச் சீராக்குவார்கள்.
5 அன்னியர் உங்கள் மந்தையை மேய்த்து நிற்பர்: வேற்று நாட்டு மக்கள் உங்கள் உழவராயும் திராட்சைத் தோட்டப் பணியாளராயும் இருப்பர்.
6 நீங்களோ, ஆண்டவரின் குருக்கள் என்று அழைக்கப்படுவீர்கள்: நம் கடவுளின் திருப்பணியாளர் என்று பெயர் பெறுவீர்கள்: பிறஇனத்தாரின் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்பீர்கள்: அவர்களின் சொத்தில் நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள்.
7 அவமானத்திற்குப் பதிலாக நீங்கள் இருபங்கு நன்மை அடைவீர்கள்: அவமதிப்புக்குப் பதிலாக உங்கள் உடைமையில் மகிழ்வீர்கள்: ஆதலால், நாட்டில் உங்கள் செல்வம் இருமடங்காகும்: முடிவில்லா மகிழ்ச்சியும் உங்களுக்கு உரியதாகும்.
8 ஆண்டவராகிய நான் நீதியை விரும்புகின்றேன்: கொள்ளையையும் குற்றத்தையும் வெறுக்கின்றேன்: அவர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றை உண்மையாகவே வழங்குவேன்: அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்து கொள்வேன்:
9 அவர்கள் வழிமரபினர் பிறஇனத்தாரிடையேயும், அவர்கள் வழித்தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள்: அவர்களை காண்பவர் யாவரும் அவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர் என ஏற்றுக்கொள்வார்கள்.
10 ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்: மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்: நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். 
11 நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.

Holydivine