Psalms - Chapter 150
Holy Bible

1 அல்லேலூயா! தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்! 
2 அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்! 
3 எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்! வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள். 
4 மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்! யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்! 
5 சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள்! கலீர் எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்! 
6 அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! அல்லேலூயா!

Holydivine